மற்றொருவரின் ஆடுகளை திருடி வந்து சந்தையில் விற்பனை செய்வதற்காக சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஆடுகளுடன் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுச்செல்லூர் கிராமத்தில் வசிக்கும் தினேஷ் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்கள் கொண்டு வந்த ஆடுகள் கொம்பசமுத்திரம் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவரின் ஆட்டுக் கொட்டகையில் இருந்து திருடப்பட்டு வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஆடுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.