Categories
மாநில செய்திகள்

திருச்சியில் சூப்பர் திட்டம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் தொடக்கம்….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதனை போல நூலகத்தில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூல்கர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இயக்குனர் இளம்பாகவத், இணை இயக்குனர் பொது நூலக கூடுதல் பொறுப்பு அமுதவல்லி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள்‌அரசு அலுவலர்கள் ஆகிய கலந்து கொண்டனர்.

அதன்பிறகு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 34 லட்சம் குழந்தைகளுக்கு 1, 76,000 மையங்கள் தேவைப்பட்டது. ஒரு மையத்தில் 20 குழந்தை என்கின்ற விதத்தில் இதை நாங்கள் திட்டமிட்டோம். இந்த திட்டம் செயல்படுத்தி ஒரு வருடம் ஆவதால் முன்னறிவிப்பு இல்லாமல் குன்னூரில் ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினோம். அதில் 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடருமா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர, இன்னும் கொஞ்சம் காலம் இந்த திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது தான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |