Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் நந்தகுமார் என்பதும், மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நந்தகுமார் பட்டினம் புதூர் பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நந்தகுமாரை கைது செய்ததுடன் அவரிடம் வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நந்தகுமாரிடம் நடத்திய விசாரணையில் தருவைகுளம் பகுதியில் வசிக்கும் அந்தோணிராஜ் என்பவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்ததுடன், டாஸ்மாக் கடையில் ஓட்டை பிரித்து மதுபாட்டில்களை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நந்தகுமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |