3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.67 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெய்க்காரன்பாளையம் பகுதியில் செல்வகார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்க்காரன்பாளையம் பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வாகார்த்திகேயன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மளிகை கடையில் கதவு பூட்டிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் ஷட்டரை திறந்து பார்த்தபோது அங்கிருந்த ரூ.45 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதே போன்று புதூர் பிரிவு பேருந்து நிலையத்தில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ரூ.7 ஆயிரம் மற்றும் ஆலாம்பாடி பேருந்து நிலையத்தில் சதீஷ்குமார் என்பவரின் இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் காங்கேயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.