திருட்டுப்போன 57 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை மீட்பதற்கான நடவடிக்கையில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருட்டுப்போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். அதாவது 57 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரையிலும் நடப்பாண்டில் மொத்தம் 157 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.