எரிகிரிமலையில் கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் சிகரெட் பண்டல்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரர் குமார் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வியாபாரம் முடிந்து கடையை அடைத்துவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து குமார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஆதாரங்களை அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஏலகிரி காவல்துறையினருக்கு குமார் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைப்போன்று ஏலகிரியில் பண்ணை வீட்டில் தொடர்ச்சியாக திருட்டு நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூட்டை உடைத்து சிகரெட் பண்டல்களை திருடிச் சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.