தொடர்ந்து பல பகுதிகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக டைலர் குமரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து குமரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் காட்வின் மோசஸ் மற்றும் சந்திரமோகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திம்மாம்பேட்டை பகுதியில் இருக்கும் குமரன் வீடு உள்பட பல பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.