திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு செய்ய செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 13 பேரும் கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 49 பேர் குணமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயது சிறுமி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள 4 பேரும் சூளகிரியில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் ஆவர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 4 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 8 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.