Categories
பல்சுவை

மனித வாழ்க்கையை உணரவைத்த… திருவள்ளுவர் தினம்…!!!

திருக்குறள் என்பது மூலம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் அதில் அடக்கிய திருவள்ளுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.

திருவள்ளுவர் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திருக்குறள்தான். பள்ளிப்பருவத்தில் இருந்தே நாம் அனைவரும் திருக்குறளை கற்று வருகிறோம். மனித குலத்துக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் திருக்குறளில் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.அப்படிப்பட்ட திருக்குறளை உலகம் மக்கள் அனைவரும் அவரவர் மொழியில் மொழிபெயர்த்து கற்று வருகிறார்கள். திருவள்ளுவர் அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுகிறார். மேலும் தமிழர்களின் ஒரு பண்பாட்டு சின்னமாகவும் திகழ்கிறார். திருவள்ளுவரின் இயற்பெயர் மற்றும் அவர் வாழ்ந்த இடம் உறுதியாக தெரியவில்லை.

இருப்பினும் இவர் கிமு முதலாம் நூற்றாண்டில் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. காவேரிப்பாக்கம் அருகில் வாழ்ந்த மார்க்கசேயம் என்பவர் வள்ளுவரின் கவித்திறனை பார்த்து தன்னுடைய புதல்வி ஆகிய வாசுகியை வள்ளுவருக்கு மணமுடித்து கொடுத்ததாக தெரிகிறது. வள்ளுவர் ஆதி பகவன் என்னும் பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரையில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.திருவள்ளுவரின் நினைவாக தமிழக அரசு 133 அடிக்கு அவருடைய சிலையை நிறுவியுள்ளது.

இது முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. அதேபோல் சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள குறல் மண்டபத்தில் வள்ளுவர் இயற்றிய 1330 குறள்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கோவில் தேர் போன்ற ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவிடம் 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு 1971ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று கொண்டது. இதனால் 1972ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

Categories

Tech |