Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருவள்ளுவர் ஹிந்து தான்” ஆராய்ச்சியில் முடிவு – அமைச்சர் தகவல் …!!

 திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே?

பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி வருகின்றனர். அதுதான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நானும் நம்புகிறேன்’.

வெளிநாட்டுப் பயணம்:

கேள்வி: துணை முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு அமையப் போகிறது?

பதில்: ‘முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு நாட்டிற்கு பயனாக இருந்ததோ, அதேபோல் துணை முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணமும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துறை சார்ந்த திட்டங்களுக்கும் பயனுள்ளதாக நிச்சயம் அமையும்’.

Categories

Tech |