Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு பாஜகவுக்கு தொடர்பு ? ஸ்டாலின் குற்றசாட்டு …!!

திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கும் , பாஜக ட்வீட்_டர் பதிவுக்கும் தொடர்ப்பு இருக்குமே ? என்று முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , நேற்று பாஜக காவி உடை அணிந்ததற்கும் , இன்று தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சேத படுத்தியதற்கும் ஏதோனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி , இந்த கொடுமையை, இந்த கேவலத்தை செய்திருக்கக்கூடிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |