Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு வர்ணம் பூசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..!

திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலைக்குகு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி கலந்துகொண்டார்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி செயலாளர் இந்திரகுமாரி, வள்ளுவர் எழுதிய குறளில் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்று உள்ளது. அதை படித்தாவது தமிழ்நாடு முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். வள்ளுவருக்கு அவமரியாதை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.அதுவரை திமுக இலக்கிய அணி சார்பில் பல்வேறு முறையில் ஆர்பாட்டம் நடைப்பெறும் என்று எச்சரித்தார். இந்தப் போராட்டத்தில் 100க்கும் அதிகமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Categories

Tech |