திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை படம்பிடித்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை தாக்கி அதிமுகவினர் கேமராக்களைப் பரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆஇஅதிமுக ஆலோசனை கூட்டம் செய்யூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 500 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முண்டியடித்துக்கொண்டு உணவு உண்ண சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைப் படம் படித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களை செய்யார் ஒன்றிய சங்க செயலாளர் மகேந்திரன் கேமராக்களை பரித்து தாக்க முயன்றார். அப்போது செய்தியாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.