Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை: ஆட்சியர் கந்தசாமி உத்தரவு..!

சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் என அனைத்தும் மூடப்பட்டன.

மேலும், மே 4ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் சில கடைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கிராமத்தில் உள்ள தனிக்கடைகள் செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்று பொதுக்கூட்டம் நடத்தவோ, வெளியே வரவோ, வழிபாடு செய்ய கோயில்களுக்கு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் புகழ்பெற்ற சித்திரை திருவிழா மக்கள் யாரும் இன்றி நடைபெற்று வருகிறது. இன்று, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்த நிலையில், சித்ரா பவுர்ணமியில் வெகு விமர்சையாக நடப்படும் கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |