Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்… கதறி அழுத 17 வயது சிறுமி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாலிபர்  பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதகளம் பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அய்யப்பன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் கோவையில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து 17 வயதுடைய சிறுமியுடன் அய்யப்பன் பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அந்த சிறுமியின் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார்.

அப்போது அய்யப்பன் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை பேசி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |