தேர் திருவிழாக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து 2012 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அவை முறையாக கடைபிடிக்கபடாததால் நாமக்கல் மற்றும் எடப்பாடியில் தேர் திருவிழாக்களின் போது மரணங்கள் நடந்ததாகவும், எனவே இந்த விதிகளை முறையாக அமல்படுத்தக் உத்தரவிடகோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு திருவிழாக்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எவ்வாறு அமல் படுத்தப்படுகிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.