நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவெற்றியூர் தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று சீமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த சீமான் கூறியதாவது, ” இங்குதான் மக்களுக்கு அதிக பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் நான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் போட்டியிடுகிறேன்.
நான் சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிட்டுருப்பேன். ஆனால் திருவெற்றியூர் தொகுதியின் மக்கள் பிரச்சனையை தீர்க்க என்னால் மட்டுமே முடியும். அதனால் தான் இந்த தொகுதிக்கு நான் போட்டியிடுகிறேன். நான் மக்களிடம் என்னென்ன குறைகள் இருக்கிறது என்று கேட்க வரவில்லை. இந்த தொகுதியில் உள்ள குறைகளை தீர்ப்பதற்க்காகவே வந்துள்ளேன். எனக்கு திருவொற்றியூர் தொகுதியில் மக்களிடமிருந்து அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி” என்று கூறியுள்ளார்.