Categories
தேசிய செய்திகள்

“இந்த ஆப் மூலம் சிலிண்டர் புக் பண்ணுங்க”… ரூ.50 கேஷ் பேக் கிடைக்கும்..!!

அமேசான் ஆப் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்தால் 50 ரூபாய் கேஷ்பேக் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகிஉள்ளது . இது எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

சமையல் சிலிண்டர்களை புக் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. போன் கால் மூலம், எஸ்எம்எஸ் மூலம், ஆன்லைன், மொபைல், வாட்ஸ் அப் போன்ற பல வசதிகள் மூலம் சிலிண்டரை புக் செய்து கொள்ளலாம். அனைவரிடம் இப்போது ஸ்மார்ட்போன் இருக்கின்றது. பேடிஎம், அமேசான் போன்ற மொபைல் ஆப் மூலம் சிலிண்டர்களை புக் செய்வதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதன் மூலம் புக் செய்தால் கேஷ்பேக் கிடைக்கின்றது என்பதற்காக வாடிக்கையாளர்கள் இதை தேர்வு செய்கின்றனர்.

அமேசான் ஆப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தால் 50 ரூபாய் வரை கிடைக்கும் என்று இன்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது .ஆமேசான் வழியாக சிலிண்டர் கட்டணம் செலுத்துவோருக்கு இந்த சலுகை கிடைக்கும். இதில் சில தினங்களுக்கு முன்னர்தான் அறிவிக்கப்பட்டது.

எப்படி பெறுவது?

அமேசான் பே செயலியில் சிலிண்டர் கட்டண வசதியை தேர்ந்தெடுத்து, கேஸ் ஏஜென்சி பெயர் மற்றும் நம்பரை பதிவு செய்து எல்பிஜி கன்ஸ்யூமர் நம்பர் ஆகியவற்றை பதிவிட்டு பணத்தை செலுத்தவும்.  முதல்முறையாக மூலம் சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என்று இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |