செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும், எடப்பாடி தரப்பு இணைய வரமாட்டேங்குது. இதனை இந்தக் கட்சியினுடைய தலைவர் ஓபிஎஸ் முடிவு செய்வார். நம்ம ஊர்ல சர்க்கஸ், கண்காட்சி எல்லாம் அப்போஅப்போ நடக்கும்ல. அதுபோல் 2500 பேர் மொத்தமாக வைத்துக் கொள்வது. ஒரு தலைவன், சத்துணவு தந்த சரித்திர நாயகன்,
ஏழைகளின் கனவுகாக, ஏழை தாய்மார்களின் வாழ்வுக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கி, அன்றைக்கே முடிவு செய்தார்.பொதுக்குழு உறுப்பினர்களை வாங்கி விடுவார்கள். பதவிலே இருப்பவர்கள். நாற்காலிகள் இருப்பவர்களை முதன்மையாக பதவி வகிப்பவர்களை காலி செய்து விடுவார்கள் என்று சொல்லி தான், அந்த சட்டத்தை கொண்டு வந்தார்.
கொடியெடுக்கும் தொண்டர்கள் தான் முடிவெடுப்பார்கள், வாக்களித்து பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னார். அதை மாற்ற முடியாது, சட்டத்தில் இடம் இருக்கிறது மேல்முறையீட்டிற்கு போகட்டும்,அது ஒன்றும் தப்பு கிடையாது. ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இது ரிமண்ட் பண்ண கேஸ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை, ஆகவே அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள், மீண்டும் விசாரிங்கள் என்று ரிமண்ட் செய்து, மீண்டும் விசாரிக்கப்பட்ட வழக்கு. எந்த அளவிற்கு அதை எடுத்துக் கொள்வார்கள் என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். மொத்தமாக ஓபிஎஸ் அண்ணன், ஒற்றுமையுடன் இருக்க அனைவரையும் அழைத்தார், நீங்கள் சொன்னது போல அதை சரிவதிகாரப் போக்கில், எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். இதை தொண்டர்களும், நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,
நான் என்ன சொல்கிறேன் என்றால்… தொண்டன் முதல்வர் ஆவார், தொண்டன் தலைவர் ஆவார். அப்போ பழனிச்சாமி நீங்கள் விட்டு விடுங்கள், வெளியே வந்து ஒரே ஒரு நபரை நியமனம் செய்யுங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே பதவி வெறியின் உடைய மறு உருவம் தான், அம்மா வகுத்த பொதுச்செயலாளர் பதவி வகிக்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.
உங்களது பணம், நீங்கள் அடித்த கொள்ளையும் உதவாது, சிறையில் இருந்து கட்சியை நீங்கள் நடத்த முடியாது. இதைத்தான் அரசிடமும், முதல்வரிடமும் கேட்டுக்கொள்கிறோம். கொட நாட்டிலிருந்து எல்லாவற்றையும் துரிதமாக செயல்படுத்துங்கள், ஜெயிலுக்கு செல்கிறவர்கள் ஜெயிலுக்கு போகட்டும், வெளியில் இருப்பவர்கள் வெளியே இருக்கட்டும். அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அனைவரும் ஒருங்கிணை வேண்டும் என்பதுதான் எங்கள் நிர்வாகிகளின் கருத்து என புகழேந்தி தெரிவித்தார்.