Categories
மாநில செய்திகள்

“இந்த படிப்பை மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய முடியாது”…. உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!

மதுரை உயர்நீதிமன்றத்தில் பாலு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பிஎஸ்சி கம்யூனிகேஷன் ஹெல்த் என்ற மருத்துவ படிப்பை நாங்கள் முடித்துள்ளோம். எங்களுடைய மருத்துவ படிப்பை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய கோரி விண்ணப்பித்தோம். ஆனால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

எனவே அவர்கள் நிராகரித்த கோரிக்கையை தடை செய்துவிட்டு எங்களுடைய படிப்பை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிஎஸ்சி கம்யூனிகேஷன் ஹெல்த் படிப்பை படித்துவிட்டு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கது கிடையாது என்று கூறினார். மேலும் மனுதாரரின் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |