மங்காத்தா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் பிரித்வி எனும் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடக்கவிருந்தது தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா தான் என்று தெரியவந்துள்ளது. அப்போது அவருக்கு கால்ஷீட் கிடைக்காததால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதன் பிறகுதான் ஆக்சன் கிங் அர்ஜுன் இப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.