Categories
லைப் ஸ்டைல்

இந்த மீனை உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வையுங்கள்…”மகிழ்ச்சி நிரம்பி வழியும்”..!!

உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் மீனை எந்த திசையை நோக்கி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

அரோவானா மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த மீன் வீட்டில் வைத்திருந்தால் பல நன்மைகள் உண்டாகும். வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி அரோவானா மீன்கள் வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படும். இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, சேமிப்பு, செல்வம், மற்றும் சக்தி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. இது வீட்டில் உள்ள தீய சக்திகளை நீக்குகிறது. உங்கள் வீட்டில் ஒரு மீன் வளர்க்க முடியாது அல்லது விருப்பம் இல்லை என்றால், இதை செய்ய மற்றொரு வழி இருக்கிறது.

தங்க அரோவான மீன் சிலையை அதில் வாயில் ஒரு நாணயத்துடன் வீட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த சிலையை உங்கள் வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம். சில விலங்கியல் நிபுணர்களின் கூற்றுப்படி அரோவானா மீன்கள் அடிவாரத்தில் அமர்ந்து பூகம்பம் குறித்த தகவல்களை தரும் என கூறுகின்றனர்.

Categories

Tech |