தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப படகுழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அதன் பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இது தொடர்பான சூட்டிங் சென்னையில் வைத்து நடைபெற்ற நிலையில் ஷாருக் மற்றும் விஜய் சந்தித்து பேசிக்கொண்டனர். இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், திரிஷா ஹீரோயின் ஆகவும், மிஷ்கின், பிரித்விராஜ், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு நடிகர் விஷாலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவலும் அண்மையில் வெளியானது.
நடிகர் விஷாலை விஜய்க்கு வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் விஜயின் 67-வது படத்தில் நடிகர் ஷாருக்கானை முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மற்றொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதாக வெளியான தகவலால் தற்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.