Categories
மாநில செய்திகள்

“கிடைச்சாச்சு அனுமதி”… ஆனா இத கண்டிப்பா செய்யணும்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

இனி மாநிலங்களுக்குள்ளும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அரசு பேருந்துகள் மட்டுமே இரு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் முதலமைச்சர் தற்போது ஒரு அறிக்கைய வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்துக்குப் பேருந்துப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததால், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் 7 முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொதுப் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், மாநிலங்களுக்குள், பயணியர் ரயில்களும் செப்டம்பர் 7 ஆம் தேதி இயக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |