கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 4213 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் டிஸ்சார்ஜ் செய்யும் முறைகளை சோதனை அடிப்படையிலான வழிமுறையிலிருந்து அறிகுறி மற்றும் நேர அடிப்படையிலான வழிமுறைக்கு மாற்றியுள்ளன. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அதை மாற்றியுள்ளோம்” என விளக்கம் அளித்துள்ளார்.