அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில் திரண்டு நின்று, போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ? எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம்.
இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டிய போராட்டம். ஏனென்றால் இந்த போராட்டம் புரட்சியாளர் அம்பேத்கரின் நன்மதிப்பிற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையிளே… அவரை கொச்சைப்படுத்தும் வகையிளே…. வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் சங்பரிவார் கும்பல் ஈடுபட்டு வரும் சூழலில், புரட்சியாளர் அம்பேத்கரின் உண்மையின் தொண்டர்களாய், புரட்சியாளர் அம்பேத்கரின் உண்மையான கொள்கை வாரிசுகளாய் நாம் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டிய ஒரு கட்டத்தில் இந்த களத்திலே கைகோர்த்து நிற்கின்றோம்.
இதுவரை பிரச்சினைக்காக… வேறு பல கோரிக்கைக்காக…. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக…. ஆற்றுநீர் உரிமைக்காக… மொழி உரிமைக்காக…. மாநில உரிமைக்காக…. ஒடுக்கப்பட்டவர்களின் மக்களின் வாழ்வாதாரத்திற்காக…. பாதுகாப்பிற்காக…. பெண்ணுரிமை பாதுகாப்பிற்காக…. மாணவர்களின் நலனுக்காக…. மீனவர்கள், பழங்குடியினர் போன்ற விளிம்புநிலை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக….
சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக என்று பல்வேறு களங்களை மக்களின் பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் அமைத்து, போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இந்த போராட்டம் எல்லா போராட்டங்களையும் விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த தலைவரை நாம், நம்முடைய கருத்தின் அடையாளமாக வைத்து… மக்கள் பிரச்சினைகளுக்காக… அமைப்பாக என்று திரட்டுகின்றோமோ அந்த தலைவரையே கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டிருக்கிறது என கண்டனம் தெரிவித்தார்.