Categories
உலக செய்திகள்

இது எல்லாமே பொய்…. என்னால் ஏற்க முடியாது…. கோர்ட்டுக்கு ஓடிய டிரம்ப் தரப்பு …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று கூறியதோடு அதிபர் டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு இன்னும் 6 வாக்குகள் கிடைத்தால் போதும், அவர் அமெரிக்க அதிபராக ஆக முடியும். அவருக்கு சாதகமாக இப்போது இருக்க கூடிய நெவேடா. இந்த மாநிலத்தில் ஆறு தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஜோ பைடன் தற்போதைக்கு முன்னிலை வகிக்கும் இந்த ஒரு மாகாணத்தில் உள்ள தேர்தல் சபை வாக்குகள் கிடைத்தால் அவர் அதிபராக முடியும்.

ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப் என்ன செய்திருக்கிறார் என்றால் ? ஒரு நாளுக்கு முன்பாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சில மாநிலங்கள் தமக்கு சாதகமாக இருந்ததாகவும், அந்த மாநிலங்களில் எல்லாம் திடீரென்று மாறி இருப்பதாக இருப்பதாகவும், இதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மோசடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை தனது ட்விட்டர் பதிவு மூலம் முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்.

அதே போல இந்திய நேரப்படி நேற்றிரவு மிச்சிகன் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முடிவுகள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த முடிவை நான் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார். ட்ரம்ப் தரப்பில் அவருடைய பரப்புரை கமிட்டியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அமெரிக்காவை பொருத்தவரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் தேர்தல் முடிவுகள் ஒருவேளை நிறுத்தப்பட்டு, அதன் பிறகு எப்போது தீர்ப்பு வருகின்றதோ அப்போதுதான் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதனால் கடைசி கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அதை டிரம்ப் ஏற்பாரா ? இல்லையா என்பதுதான் தற்போது அமெரிக்காவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
டிரம்ப் முன்னணியில் இருக்கும் பென்சில்வேனியா மாகாணத்தை பொருத்தவரை முடிவுகளை அறிவிப்பதற்கு இந்திய நேரப்படி நாளை காலை வரை கூட ஆகலாம். அங்கு 20 தேர்தலில் வாக்குகள் இருக்கின்றன. இதேபோல இதேபோல நார்த் கரோலினா ஜார்ஜியா போன்றவைகளும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |