சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது மற்றொரு அப்டேட் வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் இத்திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யா, யாஷ், ரன்வீர் சிங், ராம்சரண் உள்ளிட்ட நான்கு முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.