கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னட சினிமாவில் காந்தாரா திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் காந்தாரா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதுவரை 200 கோடி வசூலை கடந்த காந்தாரா திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை கங்கானா ரணாவத் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் காந்தாரா திரைப்படத்தை பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் சத்குருவின் ஏற்பாட்டின் படி தற்போது காந்தாரா திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நடிகர் ரிஷப் செட்டி அந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் ஈஷா மையத்தில் காந்தாரா 2-வது படமாக திரையிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படத்தை தொடர்ந்து 2-வது படமாக காந்தாரா தற்போது திரையிடப்பட்டுள்ளது.