Categories
சினிமா தமிழ் சினிமா

பால சரவணனா இது…. உடல் எடை குறைத்து இவ்வளவு ஸ்லிம் ஆகிட்டாரே…. புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிரபல நடிகர் பாலசரவணன் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனாக்காணும் சீரியல் மூலம் பிரபலமானவர் பால சரவணன். அதன்பின் முன்னணி நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான குட்டி புலி திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராகவும் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து டார்லிங், பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்த பாலசரவணன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்திலும் நடித்துள்ளார்.

டான் திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது உடலை சற்று குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்நிலையில் அதேபோல நடிகர் பாலசரவணனும் தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலசரவணனா இது என்று ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.

Categories

Tech |