விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் மறைந்த சித்ராவைப் பற்றி பேசி அனைவரும் கண் கலங்கி அழுதுள்ளனர்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சீரியலில் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் சித்ரா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜய் டிவியில் சமீபத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சித்ராவிற்கு மக்களின் நாயகி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை அவரது அம்மா அப்பா இருவரும் வாங்கிக் கொண்டுள்ளனர்.
அப்போது சித்ராவுடன் நடித்த சக நடிகைகள் அவரைப் பற்றி பேசி கண் கலங்கி அழுதனர். அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வரும் சுஜிதா, சித்ராவிற்கு சிறந்த நடிகைகான விருந்தை வாங்க வேண்டும் என்ற கனவு இருந்ததாக கூறியுள்ளார்.