‘டான்’ படத்தின் முதல் பாடல் யூடியூபில் அசத்தலான சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ”டான்”.
மேலும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், சிவாங்கி, சமுத்திரகனி, சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த முதல் பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது.
#Jalabulajangu 🕺💃 Another 1 crore views in the bank 🙏🏻https://t.co/5qMo1PewCW@Siva_Kartikeyan @Dir_Cibi @KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @bhaskaran_dop @Inagseditor @SonyMusicSouth pic.twitter.com/GiVJnXF5DY
— Anirudh Ravichander (@anirudhofficial) January 5, 2022