தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய 2 மகள்களுமே மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள். அதன் பிறகு செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இதனையடுத்து நடிகர் தனுஷை பற்றி சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கும் முன்பாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் கஸ்தூரிராஜா, அவருடைய மனைவி, இயக்குனர் செல்வராகவன், அவருடைய மனைவி கீதாஞ்சலி, சகோதரி மற்றும் தனுஷ் என 6 பேர் இருக்கிறார்கள். இந்த போட்டோவில் நடிகர் தனுஷ் தாடி, மீசை எதுவும் இல்லாமல் இருக்கிறார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.