Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுலாம் தடை பண்ணிருக்கு…! தப்புனு தெரிஞ்சும் ஏன் விக்குறீங்க ? வேலூரில் சிக்கிய கடை ஓனர்ஸ் ..!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புகார தோட்டப்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை மேற்கண்ட பதினைந்து கடைகளில் இருந்து எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட், நிக்கோட்டின் பொருட்கள், 25 ரோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதன்பின் எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் நிக்கோட்டின் பொருட்களை விற்க கடைகளுக்கு 5,000 ரூபாய் அபராதமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |