தேனி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக முறித்து ஆட்டோ மீது விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன்(29) என்பவர் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சாந்தி(42), வீரம்மாள்(45), கலையரசி(31) ஆகியோர் பாலகிருஷ்ணன் ஆட்டோவில் கொடுவிலார்பட்டியிலிருந்து நாகலாபுரத்திற்க்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவலிங்கநாயக்கன்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்துள்ளது.
இதில் ஆட்டோவில் இருந்த பாலகிருஷ்ணன் உட்பட 3 பெண்களுக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆட்டோவும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆட்டோவில் இருந்தவர்களை மீது தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாலையில் விழுந்த மரத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளனர்.