சிம்பு உடல் எடை குறைத்தது பற்றி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் உடல் எடை அதிகரித்து சில வருடங்களாக பல விமர்சனங்களில் சிக்கி வந்தார்.
மேலும், அனைத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர் உடல் எடையை குறைத்தார். இந்நிலையில், இவர் உடல் எடையை எவ்வாறு குறைத்தார் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.