இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என அவரது மனைவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடித்த இப்படம் செல்வராகவனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், என்கேஜி உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்கிப் மிகவும் பிரபலமானார்.
இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள “நானே வருவேன்” படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என்ற தகவலை சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் உருவாக்கிய கானல் நீர் என்ற கதையை படித்தேன். அதனால் அவர் மீது காதல் ஏற்பட்டது. கானல்நீர் கதை என்பது ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.