Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க…. என்ன பண்ணலாம் சொல்லுங்க ? அரசு முக்கிய முடிவு …!!

தமிழக முதல்வர்  தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து ஒரு முடிவினை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா மிக அதிகமாக இருக்கக் கூடிய நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்ற பரிந்துரையை தான் மருத்துவ நிபுணர் குழுவும் அரசுக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்தும் அமைச்சரவை முடிவு எடுக்கின்றது.

அதே போல நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான ஒரு முடிவினையும் தமிழக அமைச்சரவை எடுக்க இருக்கின்றது. குறிப்பாக உள் ஒதுக்கீட்டை பொருத்தவரை 10 சதவீத அரசு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை கலையரசன் தலைமையில் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்கு  ஒப்புதல் உள்ளிட்ட அம்சங்களுக்கு அமைச்சரவை இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |