தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய குணங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு கோபம் வரும்போதும் எல்லாம் நான் ஜிம்முக்கு சென்று கண்டபடி உடற்பயிற்சி செய்வேன். அப்போது என்னுடைய கோபம் தணிந்து விடும். நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அலையமாட்டேன்.
பணம் எனக்கு முக்கியம் கிடையாது. நடிப்பு தான் முக்கியம். நான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கவனமாக தேர்வு செய்வேன். நாம் செய்யும் வேலையை நேசிக்க முடியாத போது நமக்கு சந்தோஷம் கிடைக்காது. நாம் செய்யும் தவறுகளை புரிந்து கொள்ளும்போது தான் நம்மால் தொழிலில் முன்னேற முடியும். எப்போதும் உங்களுக்கு பிடித்த மாதிரி இருங்கள். நீங்கள் இந்த பூமிக்கு வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது சந்தோஷப்படுத்துவதற்கோ அல்ல. நம்மிடம் இருப்பதை நாம் நேசிக்க கற்றுக் கொண்டால் அனைத்தும் தானாக தேடி வரும் என்று கூறினார். மேலும் நடிகை சமந்தாவின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.