Categories
இந்திய சினிமா சினிமா

இதுதான் என் கனவு…. நிறைவேற்ற முயற்சிக்கும் நாகர்ஜுனா…. தாமதப்படுத்தும் கொரோனா….!!!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நாகர்ஜுனா.இவர் சினிமாவை தொடர்ந்து அருங்காட்சியம் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்கால சந்ததியினருக்கு திரைப்படங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். ஆகவே தெலுங்கு சினிமாவிற்காக ஒரு அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாகும்.

இந்த எண்ணம் எனக்கு 2019ஆம் ஆண்டு திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்திய போது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களை கண்டு தோன்றியது. தற்போது எனது இந்த கனவைச் செயல்படுத்த திரைப்பட சாதனையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.ஆனால் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா எனது திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |