ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்தும் கூறியுள்ளனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து ஆணையர்கள் செல்லம்மாள், ராஜேந்திரன், மேலாளர் சந்திரசேகர், தன்னார்வக்குழு பெண்கள், புதுவாழ்வு திட்ட உறுப்பினர்கள், மகளிர் காவல்துறையினர், மகளிர் மன்ற நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.