தனிநபர் அழிக்கும் புகார்களை பொதுநல வழக்காக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்பின் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது, அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது.
இதில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுகுறித்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தனிப்பட்ட முறையிலும் வழக்கு தொடரலாம். மேலும் இதுபோன்ற தனிநபர்கள் அளிக்கும் புகாரை பொதுநல வழக்காக கருதக்கூடாது என்று தெரிவித்தனர்.