யாஷிகாவும் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”பீஸ்ட்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோவும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகை யாஷிகாவும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இது ”அரபிக் குத்து, இல்ல முரட்டு குத்து” என கலாய்த்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CaPSB7CrJnR/