Categories
அரசியல் மாநில செய்திகள்

இது சாதாரண சாதனையல்ல…. தமிழக வரலாற்றில் சரித்திர சாதனை… காலரை தூக்கிவிட்ட முதல்வர் ஸ்டாலின் ..!!

தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், என்னுடைய இலக்கு எல்லாம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து திறப்பு மக்களுடைய வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் இலக்கணப்படி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி ஒரு புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய சாதனை, மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமல்ல, மண்ணை காக்க கூடிய அரசாகவும் இது செயல்படும்.  இந்த விளைச்சல் மூலமாக என்ன தெரிகிறது ? கழக ஆட்சி அமைந்த உடன் எடுக்கப்பட்ட துல்லியமான நடவடிக்கையின் காரணமாக, கடந்த ஆண்டு 1.04 கோடி மெட்ரிக் டன்னாக நெல் உற்பத்தி உயர்ந்தது,  இந்த ஆண்டு அதையும் மிஞ்சி 1.22 கோடி மெட்ரிக் தன்னாக உயர்ந்து இருக்கிறது.

அதாவது 18 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்து இருக்கிறோம். அதேபோல நெல் உற்பத்தி பாசன பரப்பு அதுவும் அதிகமாகி விட்டது. இந்த சாதனையானது சாதாரணமாக நடந்தது அல்ல, தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான்.

50 விழுக்காடு மானியத்தில் பாரம்பரிய நெல்கள் வழங்கப்பட்டது. நான் கோபிசெட்டிபாளையம் சென்றிருந்தபோது விவசாயிகள் அந்த நெல்மணிகளை கொடுத்து, நீங்கள் அறிவித்த திட்டத்தால் விளைந்தது என்று சொன்னார்கள், மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டே சொன்னார்கள், நன்றி என்று சொன்னார்கள். இதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும். அது மட்டுமா டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குருவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது, கடைமடை வரைக்கும் தண்ணீர் செல்வதற்கு உரிய வாய்ப்பாக கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்துதான் இத்தகைய மகத்தான சாதனைக்கு அடித்தளம் அமைத்தது. நெல் சாகுபடி அதிகமாவது என்பது தமிழ்நாட்டின் வளத்தை காட்டுவதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை மேலும் வளப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |