Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இது என் கணவர் அல்ல… துணை விமானியின் சடலத்தை பார்த்து… நம்ப முடியாமல் கதறி அழுத கர்ப்பிணி மனைவி… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

விமான விபத்தில் கணவன் உயிரிழந்ததை ஏற்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் இது தனது கணவன் இல்லை என கதறுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். அதோடு 120க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் துணை விமானியான அகிலேஷ் ஷர்மா உயிரிழந்த செய்தி அவரது மனைவிக்கு தெரிவிக்கப்படாமல் இருந்தது.

காரணம் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஓரிரு வாரங்களில் குழந்தை பெற்றெடுத்துவிடுவார் என்பதால், இத்தகைய அதிர்ச்சி செய்தியை அவருக்கு கூறி அவரைத் துயரத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயத்திலும் உறவினர்கள் உண்மையை மறைத்துள்ளனர். ஆனால் கணவர் இறந்த சம்பவம் மெகாவுக்கு தெரியவந்ததால் தனது சுயநினைவை இழந்தது போல் காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அகிலேஷ் ஷர்மாவின் உடல் கேரளாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது கணவர் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை பார்த்து தனது கணவர் உயிரிழந்ததை நம்பமுடியாமல் மேகா கதறி அழுதுள்ளார். அதோடு இது என் கணவன் அகிலேஷ் இல்லை, இது அவராக இருக்கவே முடியாது, அவர் நான் பிரசவம் பார்க்க இருக்கும் மருத்துவமனையில் தான் இருக்கிறார், நான் அங்கே போக வேண்டும் என தொடர்ந்து அழுது அடம் பிடித்துள்ளார்.

இதனை கண்ட உறவினர்கள் அவை எவ்வாறு சமாதானப்படுத்துவது என தெரியாமல் தவித்தனர் அதோடு உடல்நிலையை மருத்துவ குழு ஒன்று கவனித்தபடி இருக்கின்றது அகிலா ஷர்மாவின் மைத்துனரான விஜய் என்பவர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது மனைவியை உடனிருந்து கவனித்துக் கொள்ள விடுப்பு கோரி இருந்ததாகவும் அவரை இறுதியாக வீடியோ காலில் பார்த்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |