Categories
அரசியல் மாநில செய்திகள்

இது சாதாரணமல்ல… ஓடோடி வந்த எடப்பாடி… திணறி போன தர்மபுரி ..!!

தருமபுரி மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, புரட்சி தலைவி அம்மா அவர்கள் பொதுச்செயலாளராக இருந்து இந்த கட்சியை வழிநடத்தி சென்றார்கள். எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இந்த கட்சிக்கு, உங்களுடைய அருளாசியால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அத்தனை நல்லுங்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை எப்படி கண்  இமை போல காத்தீர்களோ, அதைப்போல இந்த கட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி சென்றார்கள். அந்த இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த கட்சியினை உங்களுடைய அருள் ஆசியோடு இன்றைக்கு உயர்ந்த பொறுப்பு  கிடைத்தவுடன் உங்களைக் காண ஓடோடி வந்திருக்கின்றேன்.

நல்லா எழுச்சிமிகு வரவேற்பு. இந்த வரவேற்பு சாதாரண வரவேற்பு இல்ல. சில பேர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓய்ந்துவிடும், அழிந்து விடும் என்று நினைக்கிறார்கள், ஆனால் இந்த கழகத்தை அழிக்க முடியாது. அதற்கு தருமபுரி மாவட்டத்தின் இந்த கூட்டமே சாட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையான இயக்கம், பலமான இயக்கம் என்பதை தர்மபுரி நகரத்திலே மாவட்ட தலைமை நிர்வாகிகள்,கழக தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் காண்பித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |