திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே.. நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான், இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது.
இது திராவிட மாடல் ஆட்சி, நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடைய ஆட்சி. ஒரு மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் என்று ஆரம்பித்தோம். அதன் பிறகு தலைவர் அவர்கள் அழைத்து ஒரு ஒரு தொகுதிக்கும் இந்த கூட்டத்தை நீ நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். தலைவருடைய அறிவுரையை ஏற்று கிட்டத்தட்ட 280 கூட்டங்கள் இந்த ஐந்தரை மாதங்களிலே…
அதுவும் சரியாக இன்று நீதி கட்சி தொடங்கிய நாள் (நவம்பர் 20ஆம் தேதி). இதை வேண்டும் என்று திட்டமிட்டு எல்லாம் செய்யவில்லை, எதேர்ச்சையாக அமைந்திருக்கிறது. இன்று மாலையோடு 234 தொகுதிகளில் இந்த பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நாங்கள் நடத்தி இருக்கின்றோம் என்றால், இந்த வெற்றிக்கு முழு காரணம் நம்முடைய தலைவர் அவர்கள்.
அவர் நமக்கு கொடுத்த ஆக்கமும், ஊக்கமும். அதே நேரத்தில் நான் இந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கும், மாணவர் அணி நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் இந்த நேரத்திலே நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.