விவசாயிகள் தங்கள் ரத்தத்தில் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தையும் நெருங்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. மேலும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது விவசாயிகள் ரத்தத்தைக் கொண்டு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “இது எங்களுடைய ரத்தம். எங்கள் உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப்பெரிய பாவம். பிரதமர் அவர்களே விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதன் மூலம் பாவம் செய்கிறீர்கள். ஒருவர் உரிமைகளை மற்றவர் பறிக்கக்கூடாது” என்று குருநானக் கூறியிருக்கிறார். இத்தகைய செயல் உங்களுக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது? என்று அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் விவசாயிகள்.