Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதே எங்களுக்கு சாதனை தான்… அடுத்தமுறை கோப்பையை வெல்வோம்… ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை …!!

ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்ததே மிகப்பெரிய சாதனைதான்  என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஐபிஎஸ் சீசனின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தொடரின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியுற்று தடுமாறியது. அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோற்றதோடு சேர்த்து நான்கு முறை இந்த சீசனில் அந்த அணியுடன் தோல்வியைத் தழுவியுள்ளது.

தோல்வி குறித்து கருத்து தெரிவித்த டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன்  ஷ்ரேயாஸ் ஐயர், ‘இந்த ஐபில் சீசன் சிறந்த பயணமாக அமைந்தது. அணியின் வீரர்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன். ஐபிஎல் தொடரின் இறுதி வரை வந்திருப்பது சாதாரண விஷயமல்ல. இது மிகப்பெரிய சாதனைதான். கோப்பை வெல்வது என்பது அடுத்தபடிக்கட்டாக உள்ளது. மீண்டும் வலிமை மிக்க அணியாகத்திரும்பி, கோப்பையை வெல்வோம்.

நான் பணிபுரிந்தவர்களில் மிகச் சிறந்தவராக ரிக்கி பாண்டிங் இருக்கிறார் என்பதை பலமுறை தெரிவித்துள்ளேன். எங்களுக்கு அவர் அளித்திருக்கும் சுதந்திரம் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கும். அவரை நான் பெரிதும் மதிக்கிறேன். அணி வீரர்களுக்கு இடையே கூட்டங்களை நடத்தி, வீரர்களை அவர் ஊக்குவிப்பது மிகப்பெரிய விஷயமாக எங்களுக்கு அமைந்தது என தெரிவித்தார்.

Categories

Tech |