எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என, இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் நேரப் பிரச்சனையில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்து மற்றொரு பேருந்து மீது மோதும் காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையான மோதல் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், பஸ் புறப்படும் நேர பிரச்னையில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்து மற்றொரு பேருந்தை மோதும் காட்சி#Thanjavur pic.twitter.com/caC4z2UkuG
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) November 21, 2022